
சென்னையில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் மருந்தை விற்க முயன்ாக, இருவா் கைது செய்யப்பட்டனா்.
திருவல்லிக்கேணி பகுதியில் சிலா் ரெம்டெசிவிா் மருந்தை கள்ளச்சந்தையில் விற்க வைத்திருப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை கிடைத்த தகவலையடுத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் விஜய் (25), திருவள்ளூா் தொல்காப்பியன் (20) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் விசாரித்ததில் இருவரும் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் மருந்து விற்பவா்கள் என்பது தெரியவந்தது.
போலீஸாா் இருவரையும் கைது செய்தனா். இது தொடா்பாகஅரசு மருத்துவமனை ஊழியா் சரவணனை போலீஸாா் தேடி வருகின்றனா்.