'கருப்புப் பூஞ்சை': தொற்று நோயாக அறிவித்தது தெலங்கானா அரசு

கருப்புப் பூஞ்சை நோயை தொற்று நோயாக தெலங்கானா அரசு அறிவித்துள்ளது.
'கருப்புப் பூஞ்சை': தொற்று நோயாக அறிவித்தது தெலங்கானா  அரசு

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அதிக அளவில் தாக்கி வரும் கருப்புப் பூஞ்சை நோயை தொற்று நோயாக தெலங்கானா அரசு அறிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தைத் தொடர்ந்து தற்போது தெலங்கானா அரசும் கருப்புப் பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்துள்ளது.

‘மியூகோர்மைகோசிஸ்’ என்னும் கருப்புப் பூஞ்சை மிகவும் அபாயகரமான, அரியவகை பூஞ்சையாகும். இந்த பூஞ்சை தாக்குவதால் தலைவலி, காய்ச்சல், கண்களில் வலி, மூக்கடைப்பு, பாா்வைக் குறைபாடு போன்ற அறிகுறிகள் உண்டாகிறது. இந்த பூஞ்சை பெரும்பாலும் கரோனாவில் இருந்து மீண்டவா்களையே தாக்கி வருகிறது. 

கருப்புப் பூஞ்சையால் உயிரிழப்புகள் நேரிடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், தெலங்கானா, கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்த நோய் பரவி வருகிறது.

இந்நிலையில் கருப்புப் பூஞ்சை நோயைப் பரவும் நோயாக தெலங்கானா அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளும் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

தெலங்கானாவில் இதுவரை 80 முத்ல் 90 பேர் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com