தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கருப்புப் பூஞ்சையைக் கண்டறிவது எப்படி?: வழிகாட்டு நெறிமுறைகள்

கருப்புப் பூஞ்சை தொற்றை கண்டறிவது தொடர்பாகவும், சிகிச்சை முறை குறித்தும் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

News image
Updated On :20 மே 2021, 11:36 am

DIN

கருப்புப் பூஞ்சை தொற்றை கண்டறிவது தொடர்பாகவும், சிகிச்சை முறை குறித்தும் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

அதன்படி கருப்புப் பூஞ்சைக்கு முகம், கண் கீழ் பகுதியில் வீக்கம், மூக்கடைப்பு, எலும்புகளில் புண் உள்ளிட்டவை அறிகுறிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.

கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டோருக்கு மூக்கு, கண் பகுதியில் (CT - PNS) சிடி-பிஎன்எஸ் ஸ்கேன், அல்லது முகம் முழுவதும் (MRI) எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் கருப்பு பூஞ்சை தொற்று எந்த கட்டத்தில் உள்ளது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மியூகோர்மைகோசிஸ்’ என்னும் கருப்புப் பூஞ்சை மிகவும் அபாயகரமான, அரியவகை பூஞ்சை. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதித்தவர்களுக்கு அதிக அளவாக கருப்புப் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. ராஜஸ்தான், தெலங்கானா போன்ற மாநிலங்கள் இதனை தொற்று நோயாகவும் அறிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.