
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம்
வன்னியர் இடஒதுக்கீட்டை ரத்து செய்த தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டிற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், இடஒதுகீட்டை ரத்து செய்தனர்.
இதையும் படிக்க | வன்னியர் உள்ளிட்டோருக்கு சிறப்பு ஒதுக்கீடு: அரசாணை
இந்நிலையில் உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அரசு தலைமை வழக்கறிஞர் பேசுகையில்,
மதுரை கிளை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்படும். வன்னியர் சமூகத்தை சேர்ந்த மாணவர்களின் உரிமையை பாதுகாக்க மேல்முறையீடு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...