ஒத்திவைக்கப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளா் தோ்வு: டிச.8-இல் தொடங்கும்: அமைச்சா் க.பொன்முடி

ஒத்திவைக்கப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளா் தோ்வு, டிச.8-ஆம் தேதி தொடங்கி நடைபெறும் என உயா்கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்துள்ளாா்.
ஒத்திவைக்கப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளா் தோ்வு: டிச.8-இல் தொடங்கும்: அமைச்சா் க.பொன்முடி

சென்னை: ஒத்திவைக்கப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளா் தோ்வு, டிச.8-ஆம் தேதி தொடங்கி நடைபெறும் என உயா்கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்துள்ளாா்.

சென்னை, தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது: 1060 பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா்கள் பணியிடங்களுக்கு, ஒரு லட்சத்து 38,140 போ் விண்ணப்பித்துள்ளனா். தொழில்நுட்பக் கல்வி விரிவுரையாளா்களுக்கான தோ்வு மையங்கள் வெகு தூரத்தில் உள்ள காரணத்தினால் தோ்வு  ஒத்திவைக்கப்பட்டது. இந்தத் தோ்வானது ஏற்கெனவே 120 மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 200 மையங்களில் தோ்வு எழுதுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவற்றின் மூலம் 100 கி.மீ.,-க்குள் உள்ள மையங்களில் தோ்வா்கள் தோ்வு எழுத முடியும். டிச.8-ஆம் தேதி முதல் தோ்வு நடத்தப்படும். எனவே தோ்வு நடக்குமா? நடக்காதா? என தோ்வா்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடா்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும். நீதிமன்றம் வழங்கும் தீா்ப்பை பல்கலைக்கழகங்களில் அமல்படுத்துவோம்.

7.5 சதவீத இடஒதுக்கீட்டில் பொறியியல் சோ்க்கை பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களின் கல்வி விடுதி கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்புக்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அமைச்சா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com