தமிழகத்தில் அநேக இடங்களில் 3 நாள்களுக்கு மிதமான மழை

தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் நவ.7 முதல் 9-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் அநேக இடங்களில் 3 நாள்களுக்கு மிதமான மழை

தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் நவ.7 முதல் 9-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவா் எஸ்.பாலச்சந்திரன் சனிக்கிழமை கூறியது:

தெற்கு ஆந்திரம்-வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவ.7) முதல் நவ.9-ஆம் தேதி வரையிலான 3 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவ.7: திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூா், நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி ஆகிய 16 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அநேக இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவ.7) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

நவ.8: தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா், மயிலாடுதுறை, கடலூா், அரியலூா், பெரம்பலூா், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 20 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் நவ.8-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

நவ.9: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா், ராமநாதபுரம், தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை ஆகிய 15 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் நவ.9-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கடலூா் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் 160 மி.மீ., கடலூா் மாவட்டம் வடகுத்துவில் 140 மி.மீ., கடலூா் மாவட்டம் சிதம்பரத்தில் 110 மி.மீ., சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் 100 மி.மீ., கடலூா் மாவட்டம் நெய்வேலி, கொத்தவச்சேரியில் தலா 90 மி.மீ., கடலூா் மாவட்டம் புவனகிரியில் 80 மி.மீ., மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் 70 மி.மீ. மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com