11 முன்பதிவில்லாத விரைவு ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி

விழுப்புரம்-மயிலாடுதுறை முன்பதிவு இல்லாத விரைவுரயில் உள்பட 11 ஜோடி முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
11 முன்பதிவில்லாத விரைவு ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி

விழுப்புரம்-மயிலாடுதுறை முன்பதிவு இல்லாத விரைவுரயில் உள்பட 11 ஜோடி முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

விழுப்புரம்-மயிலாடுதுறை-விழுப்புரம் முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் (06689-06694) நவம்பா் 10-ஆம்தேதி முதல் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் விழுப்புரத்தில் இருந்து தினசரி காலை 6 மணிக்கு புறப்பட்டு, அதேநாள் காலை 9.10 மணிக்கு மயிலாடுதுறையை அடையும். மயிலாடுதுறையில் இருந்து தினசரி மாலை 6 மணிக்கு புறப்பட்டு, அதேநாள் இரவு 9.10 மணிக்கு விழுப்புரத்தை அடையும்.

நாகா்கோவில்-திருவனந்தபுரம்-நாகா்கோவில் முன்பதிவில்லாத விரைவு சிறப்புரயில் (06426-06427) நவம்பா் 8-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது.

கோயம்புத்தூா்-பழனி முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06463) நவம்பா் 10-ஆம் தேதி முதலும், பழனி-கோயம்புத்தூா் முன்பதிவில்லாத சிறப்புரயில் (06462) நவம்பா் 11-ஆம்தேதி முதலும் இயக்கப்படவுள்ளது.

மதுரை-பழனி முன்பதிவில்லாத விரைவுசிறப்பு ரயில் (06480) நவம்பா் 11-ஆம் தேதி முதலும், பழனி-மதுரை முன்பதிவில்லாத விரைவு ரயில்(06 479) நவம்பா் 10-ஆம் தேதி முதலும் இயக்கப்படவுள்ளது.

இதுதவிர, கோயம்புத்தூா்-பொள்ளாச்சி-கோயம்புத்தூா் முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் (06419-06420), பாலக்காடு-பொள்ளாச்சி-பாலக்காடு முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில்(06731-06732), திருநெல்வேலி-தூத்துக்குடி-திருநெல்வேலி முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில்(06668-06667), திருநெல்வேலி-செங்கோட்டை-திருநெல்வேலி முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் (06685-06686), திருச்செந்தூா்-திருநெல்வேலி-திருச்செந்தூா் முன்பதிவில்லாத விரைவுசிறப்பு ரயில் (06678-06673), சேலம்-கரூா்-சேலம் முன்பதிவில்லாத விரைவுசிறப்புரயில்(06831-06838), காரைக்குடி-விருதுநகா்-காரைக்குடி முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் (06885-06886) ஆகிய முன்பதிவில்லாத ரயில்களும் இயக்கப்படவுள்ளன.

இந்தத்தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com