அதி கனமழை எச்சரிக்கை: எவையெல்லாம் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்?

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்
அதி கனமழை எச்சரிக்கை
அதி கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா, வடகடலோர மாவட்டங்களில் இன்றுமுதல் நவ. 12 வரை பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

எனவே முன்கூட்டியே மக்கள் கீழ்காணும் அத்தியாவசிய பொருள்களை கையிருப்பில் வைத்துக் கொள்ள பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

  • கேஸ் சிலிண்டர்
  • மண்ணெண்ணெய்
  • மெழுகுவர்த்தி
  • கொசுவர்த்தி
  • ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி, மளிகைப் பொருள்கள், மாத்திரைகள், குழந்தைகளுக்கு தேவையான பால் பவுட்டர், நாப்கின்கள்
  • குறிப்பாக அத்தியாவசிய வீட்டு உபயோக பொருள்களை வாங்கி வைக்கவும்
  • பேட்டரி டார்ச்
  • பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்
  • தேவையான மாத்திரைகள்
  • முதலுதவி சாதனங்கள்

என்னென்ன செய்யலாம், செய்யக்கூடாது

  • செல்போன்களை சார்ஜ்  செய்து வைத்துக் கொள்ளவும்
  • இடி மின்னல் சமயத்தில் செல்போன்களை பயன்படுத்த வேண்டாம்
  • இடி மின்னல் சமயத்தில் மரங்களுக்கு அருகாமையில் ஒதுங்குவதை அமர்வதை தவிர்க்கவும்
  • மழை பொழியும் சமயத்தில் வீட்டைவிட்டு வெளியே அல்லது வெளியூர் செல்வதை தவிக்கவும்
  • தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும்
  • அரவு அலுவலர்கள் தங்களை வந்து அழைக்கும் பொழுது ஒத்துழைப்பு கொடுத்து அரசு நிவாரண மையங்களுக்கு செல்வது பாதுகாப்பானது
  • குழந்தைகளை தேவையின்றி வெளியே விடவேண்டாம்
  • தங்கள் பகுதியில் தேங்கி இருக்கும் தண்ணீரில் விளையாட விடுவதை கட்டாயமாக தவிர்க்கவும்
  • மழை நேரங்களில் மின்சார துண்டிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் தண்ணீரை தேவையான அளவு பிடித்து வைத்துக் கொள்ளவும்
  • எப்பொழுதும் டேங்கில் தண்ணீர் சேமித்து வைத்துக் கொள்ளவும்
  • வீடுகளுக்கு அருகில் மரங்கள் இருந்தால் அதற்கு அருகாமையில் அமர்வதை தவிர்க்கவும்
  • மழை பெய்யும் நேரத்தில் மின் கம்பிகள் அறுந்து கிடக்க வாய்ப்புள்ளதால், சாலைகளில் கவனமாக நடக்கவும்
  • வீட்டு சுவர்களில் நீர் கசிந்து மின்சாதனங்களில் மின்சாரம் பாய வாய்ப்புள்ளதால் மின்சாதனங்களை கவனத்துடன் பயன்படுத்தவும்
  • சுவிட்ச் போடும் போது கவனமுடன் இருக்க வேண்டும். குழந்தைகளை சுவிட்ச் போட அனுமதிக்க வேண்டாம்
  • வானிலை நிலவரங்களை அடிக்கடி கவனியுங்கள், சூழ்நிலைக்கு ஏற்ப கவனத்துடன் செயல்பட வேண்டும்
  • வீண் வதந்திகளை நம்பவோ, பரப்பவோ வேண்டாம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com