மழை பாதிப்பு: அமைச்சர் எ.வ. வேலு நேரில் ஆய்வு

சென்னையில் கனமழையினால், பாதிக்கப்பட்ட பகுதிகளை, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார்.
மழை பாதிப்பு: அமைச்சர் எ.வ. வேலு நேரில் ஆய்வு
மழை பாதிப்பு: அமைச்சர் எ.வ. வேலு நேரில் ஆய்வு

சென்னையில் கனமழையினால், பாதிக்கப்பட்ட பகுதிகளை, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. கடந்த ஐந்து நாள்களாக மழை பெய்த நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதை நேரில் சென்று ஆய்வு செய்து வரும் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர்எ.வ.வேலு இன்று (13.11.2021) காலை 8 மணி முதல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்களுடன் சேர்ந்து ஆய்வு செய்தனர்.

இதில், சென்னையில் பல சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கியுள்ள மழைநீரை மின் மோட்டரை பொருத்தி நீரை அகற்றும் பணியை இன்று (13.11.2021) (பஜார் சாலை, அண்ணா சாலை சந்திப்பு) சைதாப்பேட்டை, 100 அடி சாலை, (ஈக்காட்டுத்தாங்கல்), பாரதிதாசன் காலனி போன்ற பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்து தேங்கியுள்ள நீரை விரைவில் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வுப்பணிகளை முடித்துவிட்டு செய்தியாளர்கள் சந்திப்பின்போது இனிவரும் காலங்களில் இதுபோன்று மழை நீர் தேங்குவதை தடுக்கும் பொருட்டு மழைநீர் வடிகால்கள் சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com