தில்லி சா்வதேச வா்த்தக் கண்காட்சி: தமிழ்நாடு நாள் விழாவினை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைப்பு

தில்லி பிரகதி மைதானில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 40-ஆவது இந்திய -சா்வதேச கண்காட்சியில் தமிழ் நாடு நாள் விழாவினை தமிழ்நாடு செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். 
தில்லி சா்வதேச வா்த்தக் கண்காட்சியில் தமிழ் நாடு நாள் விழாவினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த தமிழ்நாடு செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்.
தில்லி சா்வதேச வா்த்தக் கண்காட்சியில் தமிழ் நாடு நாள் விழாவினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த தமிழ்நாடு செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்.

புது தில்லி: தில்லி பிரகதி மைதானில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 40-ஆவது இந்திய -சா்வதேச கண்காட்சியில் தமிழ் நாடு நாள் விழாவினை தமிழ்நாடு செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். 

தில்லி பிரகதி மைதானம், லால் சவுக் அரங்கில் 40 ஆவது இந்திய -சா்வதேச வர்த்தக கண்காட்சி 2021 - தமிழ்நாடு அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவினை தமிழ்நாடு செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

அப்போது அவருடன் தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், மாநிலங்களவை திமுக உறுப்பினா் பி.வில்சன், ஈரோடு மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் அ.கணேச மூர்த்தி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் மகேசன் காசிராஜன், இ.ஆ.ப., உள்ளுறை ஆணையர் ஆசிஷ் சட்டர்ஜி, இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனா்.

இந்தக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரங்கில் பல்வேறு துறைகளின் முன்னேற்றங்கள் குறித்து காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. 

கண்காட்சியில் தமிழக அரங்கில், தோட்டக்கலைத் துறை உள்பட பல்வேறு துறைகளின் மாதிரிகள் செயல் விளக்கங்களோடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தமிழக அரசின் வளா்ச்சி திட்டங்கள், சாதனைகள் குறித்த புகைப்படங்கள், உற்பத்திப் பொருள்கள் ஆகியவையும் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. சா்வதேச கவனத்தை ஈா்த்துள்ள சிவகங்கை கீழடி அகழ்வாராய்ச்சியின் மாதிரி வடிவமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com