ஆத்தூரில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்: அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு

சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி அண்ணா கலையரங்கில் தமிழக முதல்வரின் உத்திரவின் பேரில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனுக்களை பெற்றுக்கொண்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு.
சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனுக்களை பெற்றுக்கொண்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு.


சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி அண்ணா கலையரங்கில் தமிழக முதல்வரின் உத்திரவின் பேரில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

முன்னதாக தலைவாசலில் நடைபெற்ற முகாமில் ஏராளமானோர் மனுக்களை அளித்துள்ளனர். ஆத்தூர் கோட்டாட்சியர் சா.சரண்யா அனைவரையும் வரவேற்று பேசினார். 

நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன் கௌதமசிகாமணி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் சேலம் வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ரா.ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் வெ.ஆலின் சுனேஜா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, நகரச் செயலாளர்கள் கே.பாலசுப்ரமணியம்  என்.பி.வேல்முருகன், முன்னாள் நகரமன்றத்தலைவர் காட்டுராஜா(எ)எம்.பழனிசாமி, முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் அ.கமால்பாஷா, ஜெ.ஸ்டாலின், பி.சிவராமன், வி.ராஜாமணி செல்வம், ஒன்றிய செயலாளர் வெ.செழியன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கு.சின்னதுரை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முடிவில் வட்டாட்சியர் மாணிக்கம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com