
சபரிமலை ஐயப்பன் கோயில்
கனமழை காரணமாக பம்பை ஆற்றுப்பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளம் மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பம்பை ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளம் குறைந்தவுடன் சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் திவ்யா தெரிவித்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...