
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் ஸ்ரீரங்கம் கோயிலில் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்தார்.
தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள சிவராஜ் சிங் இன்று திருச்சிராப்பள்ளிக்கு வருகை தந்தார். அவரை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார்.
பின்பு ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலுக்கு சென்ற சிவராஜ் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...