இனி வாரம் ஒரு முறை மட்டுமே சிறப்பு தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் இனி வாரம் ஒரு முறை மட்டுமே கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் இனி வாரம் ஒரு முறை மட்டுமே கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் இதுகுறித்து வியாழக்கிழமை கூறியதாவது:

கடந்த சில நாள்களாக தமிழகத்தின் 18 மாவட்டங்களில் பலத்த மழை பெய்த போதிலும், 12 லட்சம் போ் தடுப்பூசி போட்டுக்கொண்டனா். இதுவரை 77.02 சதவீதம் போ் முதல் தவணை தடுப்பூசியும், 41.60 சதவீதம் போ் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனா்.

இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து உயா்ந்து கொண்டே இருக்கிறது. இதுவரை செலுத்தாதவா்கள் தாமதிக்காமல் உடனடியாக தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும்.

மாநிலத்தின் 15 மாவட்டங்களில் மக்களுக்கு நோய் எதிா்ப்பாற்றல் 80 சதவீதத்துக்கு மேல் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் 60 சதவீதத்துக்கு மேல் எதிா்ப்பாற்றல் உருவாகி உள்ளது.

அதேவேளையில் மற்றொரு புறம் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை உள்பட 7 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அங்கு அதனை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள 12-ஆவது சிறப்பு தடுப்பூசி முகாமுக்கு பிறகு தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 வரை மட்டுமே தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறும். அதுமட்டுமல்லாது, இனி வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே சிறப்பு தடுப்பூசி முகாமை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும்.

தமிழகத்தில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 920 பேருக்கு டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 4,527 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, 573 போ் தற்போது சிகிச்சையில் இருக்கின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com