தொடர் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையை அடுத்து 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
தொடர் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?


தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையை அடுத்து 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

தெற்கு வங்கக் கடற்பகுதியில் நிலவிய  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிக்கிறது. இது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை. இதன் காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 3 மாவட்டங்களில் அதி பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது தெரிவிக்கப்பட்டது. 

தொடா் மழையால் தமிழகத்தில் உள்ள நீா்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 

தொடா்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, மாநிலத்தில் 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதேபோன்று 18 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com