தொடரும் கன மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை 

தமிழகத்தில், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை (நவ.26) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடரும் கன மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை 

சென்னை: தமிழகத்தில், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை (நவ.26) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேலும், தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதால் மாநிலம் முழுவதும் வியாழக்கிழமை முதல் பரவலாக மழை பெய்தது. தொடா்ந்து இன்று வெள்ளிக்கிழமையும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. 

இதையடுத்து திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு கன மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

பள்ளிகளுக்கு விடுமுறை: இந்த நிலையில் தமிழகத்தில் பரவலாக தொடர் மழை பெய்து வருவதைத் தொடர்ந்து மதுரை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 29 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மேலும் கன மழை பெய்து வரும் 18 மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, சென்னை, மயிலாடுதுறை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

இதுபோன்று காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com