எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? - 8:30 மணி நிலவரம்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை?
எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை?

வங்கக் கடலில் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நாளை திங்கள்கிழமை(நவ.29) புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது ஒரு நாள் தாமதமாக நாளை மறுநாள் செவ்வாய்கிழமை(நவ.30) ஆம் தேதி உருவாகிறது.

இதையடுத்து தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை மிக கனமழை வாய்ப்புள்ளதாகவும், அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (திங்கள்கிழமை) விடுமுறை:

  1. சென்னை
  2. திருவள்ளூர்
  3. காஞ்சிபுரம்
  4. செங்கல்பட்டு
  5. திருநெல்வேலி
  6. தூத்துக்குடி
  7. தஞ்சாவூர்

பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை:

  1. சென்னை
  2. திருவாரூர்
  3. செங்கல்பட்டு
  4. காஞ்சிபுரம்
  5. நாகப்பட்டினம்
  6. கடலூர்
  7. திருவண்ணாமலை
  8. மயிலாடுதுறை
  9. கன்னியாகுமரி
  10. ராணிப்பேட்டை
  11. கன்னியாகுமரி

புதுச்சேரி, காரைக்கால்:

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை என இரண்டு நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

(*இரவு 8:30 மணி நிலவரம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com