தெற்கு அந்தமான் கடல்பகுதியில் புதிய குறைந்த காற்றறழுத்தத் தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை (நவ.29) உருவாக வாய்ப்புள்ளது.
இது, மேலும் வலுப்பெற்று மேற்கு- வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் காரணமாக, அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டா் வேகத்திலும் பலத்தகாற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் நவ.29, 30-ஆம் தேதிகளில் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளுக்கு டிசம்பா் 1-ஆம் தேதி வரை மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.