
புதிய காவல் ஆணையரங்களின் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள ரவி, சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையரகம் மூன்றாக பிரிக்கப்பட்டு தாம்பரம், ஆவடிக்கு தனி காவல் ஆணையரகம் உருவாக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இதையும் படிக்க- கேரளத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி!
அதன்படி ஆவடி காவல் ஆணையராக ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், தாம்பரத்திற்கு ஏடிஜிபி எம்.ரவியை ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் புதிய காவல் ஆணையரங்களின் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள ரவி, சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த சந்திப்பின்போது டிஜிபி சைலேந்திர பாபு உடனிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.