'தமிழகத்தில் 22 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போடவில்லை'

தமிழகத்தில் 90% கரோனா மரணங்கள், இரண்டு தவணை தடுப்பூசி போடாதவர்கள் என்று மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை அயனாவரம் நேரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் முதல்வர் ஆய்வு.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை அயனாவரம் நேரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் முதல்வர் ஆய்வு.

தமிழகத்தில் 90% கரோனா மரணங்கள், இரண்டு தவணை தடுப்பூசி போடாதவர்கள் என்று மக்கள் நல்வாழ்வுத்துறைச்  செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

தமிழகத்தில் 24,760 இடங்களில் நான்காவது கட்ட மெகா தடுப்பூசி முகாம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 33.5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. 

மேற்கு மாவட்டங்களில் கரோனா தொற்று குறைவதற்கான அறிகுறி காணப்படுகிறது. கடந்த 2 மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கீட்டில் 90% கரோனா மரணங்கள், இரண்டு தவணை தடுப்பூசி போடாதவர்கள். 

முதியோர்களில் 42% பேர் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி போட்டுகொண்டுள்ளார்கள். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. 

தமிழகத்தில் மொத்தமாக 22 லட்சம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடத் தகுதியாகி தடுப்பூசி போடாமல் இருக்கின்றனர். 

கடந்த  வாரம் 10 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டனர். 

எனவே, தடுப்பூசி போடத் தகுதியான முதியோர்கள் மெகா தடுப்பூசி முகாமைப் பயன்படுத்தி இன்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com