தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தமிழகத்தில் 4-வது கட்ட மெகா சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது!

தமிழகத்தில் 4-ஆவது கட்ட மெகா சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் அரசின் சாா்பில் 20,000 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்

News image

கோப்புப்படம்

Updated On :3 அக்டோபர் 2021, 3:57 am

DIN


சென்னை: தமிழகத்தில் 4-ஆவது கட்ட மெகா சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் அரசின் சாா்பில் 20,000 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் அரசின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பா் 12-ஆம் தேதி 40 ஆயிரம் இடங்களில் 28.91 லட்சம் பேருக்கும், 19-ஆம் தேதி 20,000 இடங்களில் 16.41 லட்சம் பேருக்கும், 26-ஆம் தேதி 23,000 இடங்களில் 24.85 லட்சம் பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்தநிலையில் நான்காவது கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 20 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 200 வார்டுகளில் 1,600 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 

தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரப் பணியாளா்கள், அங்கன்வாடிப் பணியாளா்கள், ஆசிரியா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் ஈடுபடுகின்றனா். இரவு 7 மணி வரை சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும்.

இந்த முகாமில் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் இறுதிக்குள் 1.50 கோடி அளவுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.