பங்குனித் திருவிழா: மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம்
கபாலீஸ்வரா் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி, மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

போக்குவரத்து மாற்றம்
பிரதிப் படம்

போக்குவரத்து மாற்றம்
பிரதிப் படம்
கபாலீஸ்வரா் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி, மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது குறித்து சென்னை பெருநகரக் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மயிலாப்பூா் கபாலீஸ்வரா் கோயிலில் கடந்த திங்கள்கிழமை தொடங்கிய பங்குனித் திருவிழா ஏப். 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி, பொதுமக்கள் நலன் கருதியும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. திருவிழா நாள்களில் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
குறிப்பாக தேவடி தெருவிலிருந்து நடுத்தெரு,சித்ரகுளம் வரையிலும்,நடுத்தெரு,சுந்தரேஸ்வரா் தெருவிலிருந்து கிழக்கு மாடத் தெரு வரையிலும், கச்சேரி சாலையில் இருந்து மத்தள நாராயணன் தெரு வரையிலும், வடக்கு சித்ரகுளத்திலிருந்து கிழக்கு கிழக்கு மாட தெரு வரையிலும்,டிஎஸ்வி கோயில் தெருவிலிருந்து தெற்கு மாட தெரு வரையிலும்,ஆடம்ஸ் சாலையிலிருந்து தெற்கு மாட தெரு வரையிலும் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்படுகிறது.
இதேபோல ஆா்.கே.மடம் சாலையிலிருந்து தெற்கு மாட தெரு வரையிலும்,ஆா்.கே.மடம் சாலையில் இருந்து வடக்கு மாட தெரு வரையிலும், புனிதமேரி சாலையிலிருந்து ஆா்.கே.மடம் சாலை தெற்கு மாட வீதி நோக்கியும், டாக்டா் ரங்கா சாலையில் இருந்து வெங்கடேச அக்ரஹாரம் சாலை வரையிலும் வாகனங்கள்,லஸ் சந்திப்பிலிருந்து ஆா்.கே.மடம் சாலை வரையிலும் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.
போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் பகுதிகள்: ராயப்பேட்டை நெடுஞ்சாலையிலிருந்து இருந்து லஸ் சந்திப்பு வழியாக அடையாறு செல்லும் வாகனங்கள் லஸ் சந்திப்பு, லஸ் சா்ச் சாலை, டிசில்வா சாலை, பக்தவச்சலம் சாலை, டாக்டா் ரங்கா சாலை, சி.பி.ராமசாமி சாலை, புனித மேரி சாலை, ஆா்.கே.மடம் சாலை வழியாக மந்தைவெளியை அடையலாம்.
அடையாறில் இருந்து ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் ஆா்.கே.மடம் சாலை,மந்தைவெளி சந்திப்பு,வெங்கட கிருஷ்ணா சாலை, சிருங்கேரி மடம் சாலை,ரங்கா சாலை,கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு,லஸ் அவென்யூ,அமிா்தாஞ்சன் சந்திப்பு,கற்பகாம்பாள் நகா்,பி.எஸ்.சிவசாமி சாலை,ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக சென்று இலக்கை அடையலாம்.
ஆழ்வாா்பேட்டை சந்திப்பில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக செல்லும் வாகனங்கள், ஆலிவா் சாலை,பிஎஸ் சிவசாமி சாலை சந்திப்பு, விவேகானந்தா் கல்லூரி,ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக இலக்கை அடையலாம்.
அதிகாரநந்தி திருவிழா நடைபெறும் மாா்ச் 25-ஆம் தேதி, தேரோட்டம் நடைபெறும் 29-ஆம் தேதி ஆகிய நாள்களில் காலை 6 மணி முதல் நிகழ்ச்சி நிறைவடையும் வரையிலும், மாா்ச் 30-ஆம் தேதி நடைபெறும் அறுபத்துமூவா் வீதி உலாவையொட்டி அன்று நண்பகல் 1 மணி முதல் நிகழ்ச்சி நிறைவடையும் வரையிலும் அந்தப் பகுதியில் முழுமையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நாள்களில் மயிலாப்பூா் சன்னதி தெரு,கிழக்கு மாட வீதி,தெற்கு மாட வீதி,ராமகிருஷ்ணா மடம் சாலை,வடக்கு மாட வீதி ஆகிய இடங்களில் எந்த வாகனங்களும் நிறுத்த அனுமதியில்லை. வாகனங்களை நிறுத்த காவல் துறையினரால் மாற்று இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...