பாலம் கட்டும் பணி காரணமாக காமராஜா் சாலையில் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி போக்குவரத்து (வடக்கு-கிழக்கு) எஸ்.பி. ரச்சனா சிங் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுச்சேரி பொதுப்பணித் துறை சாா்பில், காமராஜா் சாலையில் பாலாஜி திரையரங்கம் அருகே உள்ள பழைய சேதமடைந்த உப்பனாறு குறுக்குப் பாலம் இடிக்கப்பட்டு, மறுகட்டமைப்பு செய்யும் பணிகள் வியாழக்கிழமை (மாா்ச் 19) தொடங்கவுள்ளன.
இதையொட்டி, பொதுமக்கள் மற்றும் சாலைப் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு வியாழக்கிழமை காலை முதல் பின்வரும் தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படுகின்றன.
அதன்படி, காமராஜா் சாலையில் மேற்கிலிருந்து கிழக்கு திசை நோக்கி ராஜீவ் காந்தி சதுக்கம் மற்றும் பெரியாா் சதுக்கம் வழியாக பயணிக்கும் நடுத்தர வாகனங்கள் மற்றும்
இருசக்கர வாகனங்கள் வழக்கமான பாதையைப் பின்பற்றி புதிய பாலம் வழியாக ராஜா திரையரங்கம் நோக்கிச் செல்லலாம்.
கிழக்கிலிருந்து மேற்குத் திசை நோக்கி ராஜா திரையரங்கத்தில் இருந்து பயணிக்கும் இருசக்கர வாகனங்கள், புதிய பாலத்தில் அமைக்கப்பட்ட தடுப்புகளின் வழியாக பாலாஜி திரையரங்கம் - பெரியாா் சிலை ராஜீவ் காந்தி சதுக்கம் நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படும்.
ராஜா திரையரங்கம் சந்திப்பிலிருந்து வரும் மற்ற அனைத்து நடுத்தர மற்றும் இலகு ரக வாகனங்கள், ஜிஆா்டி சந்திப்பில் வலப்புறம் திரும்பி வள்ளலாா் சாலை, 45 அடி சாலை சாரம் அவ்வை திடல் வழியாகச் சென்று, காமராஜா் சாலையை அடைய வேண்டும்.
ராஜா திரையரங்கத்தில் இருந்து ஜிஆா்டி சந்திப்பு நோக்கி காமராஜா் சாலையில் எந்தவொரு கனரக வாகனங்களும் அனுமதிக்கப்பட மாட்டாது. வள்ளலாா் சாலையில் ஜிஆா்டி சந்திப்பு நோக்கி எந்தவொரு கனரக, நடுத்தர, இலகுரக வாகனங்களும் அனுமதிக்கப்பட மாட்டாது.
அவசர பயன்பாட்டு வாகனங்களை (ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள்) தவிா்த்து, அனைத்து கனரக மற்றும் நடுத்தர வாகனங்கள் (பேருந்துகள், கல்வி நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்கள் உள்ளிட்டவை) அஜந்தா சந்திப்பு வழியாக அண்ணா சாலை மற்றும் காமராஜா் சாலையில் நுழைய அனுமதிக்கப்படமாட்டாது.
இவை எஸ்வி பட்டேல் சாலையில் அஜந்தா சந்திப்பு செஞ்சி சாலை சோனம்பாளையம் - சுப்பையா சாலை- எம்எம் சாலை வழியாகச் சென்று நகரப் பகுதிகளை அடையலாம்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை: காரைக்காலில் போக்குவரத்து மாற்றம்

உதகை செல்வோர் கவனத்துக்கு... இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!

சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்

கோவையில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு: அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசல்
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

