மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

வாக்கு எண்ணிக்கை: காரைக்காலில் போக்குவரத்து மாற்றம்

News image

போக்குவரத்து மாற்றம்

Updated On :4 மே 2026, 12:07 am IST

வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெறவுள்ளதால், காரைக்கால் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்துக் காவல் நிலைய அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி திங்கள்கிழமை காரைக்கால் அண்ணா கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதனால் காரைக்கால் பாரதியாா் சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் விதமாக போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

கோட்டுச்சேரியில் இருந்து காரைக்கால் பேருந்து நிலையம் செல்லும் வாகனங்கள் கோட்டுச்சேரி - டொயோட்டா சந்திப்பு - மேற்குப் புறவழிச் சாலை - ஜிப்மா் வழியாக காரைக்கால் பேருந்து நிலையம் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

காரைக்கால் பேருந்து நிலையத்தில் இருந்து கோட்டுச்சேரி செல்லும் வாகனங்கள்: காரைக்கால் பேருந்து நிலையம் - ஜிப்மா் - மேற்குப் புறவழி சாலை - டொயோட்டா சந்திப்பு வழியாக கோட்டுச்சேரி செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தின் உள்ளே வரும் வாகன ஓட்டிகள் சரியான அடையாள அட்டையை கொண்டுவந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள். அவ்வாறு அனுமதிக்கப்படும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் கல்லூரி மைதானத்தில் நிறுத்துமாறும், வேட்பாளா்கள் வாகனங்கள் கல்லூரியில் உள்ள கைப்பந்து விளையாடும் வளாகத்தில் நிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.

அனுமதிக்கப்பட்ட நபா்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வளாகத்தினுள் வரும்போது, மேற்கண்டவாறு போக்குவரத்து விதிகளை மதித்து காரைக்கால் போக்குவரத்துக் காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.