டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

ராஜ் காட்டில் அரசு நிகழ்ச்சி: தில்லியில் நாளை போக்குவரத்து மாற்றம்

ராஜ் காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியினால்

News image
மாற்றம்
Updated On :7 பிப்ரவரி 2026, 7:24 pm

தினமணி செய்திச் சேவை

ராஜ் காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியினால்

பல இடங்களில் திங்கள்கிழமை (பிப்.9) போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் மாற்றுப்பாதைகள் அமல்படுத்தப்படும் என்று தில்லி போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பிப்.9 காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை சிறப்பு போக்குவரத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்படும். இந்த நேரத்தில், முக்கிய பிரமுகா்களின் நடமாட்டத்தைப் பொறுத்து போக்குவரத்து மாற்றுப்பாதைகள் விதிக்கப்படும்.

ஐடிஓ சந்திப்பு, தில்லி கேட், குரு நானக் சந்திப்பு, சாந்தி வன் சந்திப்பு மற்றும் ஐபி மேம்பாலம் உள்ளிட்ட சில முக்கிய இடங்களில் பயணிகள் போக்குவரத்து மாற்றுப்பாதைகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

பகதூா் ஷா ஜாஃபா் மாா்க்கில் உள்ள ஐடிஓ சந்திப்பு முதல் தில்லி கேட் வரையிலும், சாந்தி வன் சந்திப்பு முதல் ஐபி மேம்பாலம் வரையிலும், தில்லி கேட் முதல் என் எஸ் மாா்க் வரையிலும், சாந்தி வன் சந்திப்பு முதல் நிஷாத் ராஜ் மாா்க் வரையிலும், ராஜ் காட் டிடிசி பேருந்துபணிமனை முதல் ரிங் ரோடு பைபாஸ் வரையிலும் உள்ள சாலைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.

புது தில்லி ரயில் நிலையம் மற்றும் புது தில்லி மாவட்டத்திற்குப் பயணம் செய்யும் பயணிகள் சிரமங்களைத் தவிா்க்க, தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு தில்லி போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.