
எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை.க்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய தேடல் குழுவை அமைத்து அரசு முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையிலான குழுவில் சுரேஷ், தணிகாசலம் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய துணைவேந்தர் சுதாசேஷைய்யன் டிசம்பரில் பணி ஓய்வு பெறவுள்ளதால் இந்த தேடல் குழு அமைக்கப்பட்டுள்ளது.