குன்னூர் ஆலையில் விரைவில் தடுப்பூசி உற்பத்தி

குன்னூரில் மூடப்பட்டுள்ள பாஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தடுப்பூசி உற்பத்தி மையத்தில் வரும் நவம்பர் மாதத்திற்குள் சோதனை முறையில் தடுப்பூசிகள் உற்பத்தி தொடங்கும்
குன்னூர் ஆலையில் விரைவில் தடுப்பூசி உற்பத்தி
குன்னூர் ஆலையில் விரைவில் தடுப்பூசி உற்பத்தி

குன்னூரில் மூடப்பட்டுள்ள பாஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தடுப்பூசி உற்பத்தி மையத்தில் வரும் நவம்பர் மாதத்திற்குள் சோதனை முறையில் தடுப்பூசிகள் உற்பத்தி தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா திமுக எம்.பி. வில்சனுக்கு பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு, குன்னூர், கிங்ஸ் இன்ஸ்டிடியூட் ஆகிய மூன்று தடுப்பூசி உற்பத்தி மையங்களிலும் விரைவாக கரோனா தடுப்பூசி உற்பத்திக்கு அனுமதி தரக் கோரி திமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அந்த கடிதத்திற்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது,

குன்னூரில் உள்ள பாஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தடுப்பூசி உற்பத்தி மையத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வருகின்ற நவம்பருக்குள் இந்த பணிகள் முடிவடைந்து சோதனை முறையில் தடுப்பூசிகள் உற்பத்தி தொடங்கப்படும்.

மேலும், இந்த தடுப்பூசி மையத்திலிருந்து பிற பகுதிகளுக்கு 2023ஆம் ஆண்டு முதல் விநியோகிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com