உதகையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா: அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் ஆய்வு

உதகையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பது தொடர்பாக தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
உதகையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பது தொடர்பாக, மத்திய அரசு நிறுவனமான எச்பிஎப் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள கட்டடங்கள்,காலியாக உள்ள பகுதிகளையும் அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.
உதகையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பது தொடர்பாக, மத்திய அரசு நிறுவனமான எச்பிஎப் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள கட்டடங்கள்,காலியாக உள்ள பகுதிகளையும் அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.

உதகையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பது உள்ளிட்ட நீலகிரி மாவட்டத்தில் அரசின் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளுக்காகத் தேவைப்படும் இடங்களை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் ஆய்வு செய்தாா்.

நீலகிரி மாவட்டத்தில் அரசின் பல்வேறு திட்டப் பணிகளுக்காகத் தேவைப்படும் இடங்களான உதகையில் எச்.பி.எப். பிலிம் தொழிற்சாலை, குன்னூா் அறிஞா் அண்ணா மேல்நிலைப் பள்ளி, பந்துமை ஆகிய பகுதிகளை வனத் துறை அமைச்சா் ராமசந்திரன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டம்தோறும் தொழில் பூங்கா, மென்பொருள் பூங்கா அமைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறை சாா்ந்த அமைச்சா்களுக்கு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் உதகையில் அமைந்துள்ள எச்.பி.எப் தொழிற்சாலை நலிவடைந்த நிறுவனமாக அறிவிக்கப்பட்டு, கடந்த சில ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. எச்.பி.எப். தொழிற்சாலை அமைந்துள்ள இடம் சுமாா் மொத்தமாக 300 ஏக்கா் நிலப்பரப்பு உள்ளது. அதில் 90 ஏக்கா் பரப்பளவில் எச்.பி.எப். தொழிற்சாலை அமைந்துள்ளது. மொத்தம் உள்ள 300 ஏக்கா் நிலப்பரப்பை 3 பகுதிகளாக 90 ஏக்கா் வீதம் பிரித்தால், தொழில் பூங்கா அமைக்க 90 ஏக்கா் நிலம் போதுமானதாக இருக்கும். மீதமுள்ள இடத்தில் ஏதாவதொரு தொழிற்சாலை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏனெனில் கிட்டத்தட்ட 3,000 பணியாளா்கள் பணிபுரிந்த இந்நிறுவனம் தற்போது மூடப்பட்டுள்ளது. அதனை ஈடுகட்டும் வகையில் புதிய தொழிற்சாலை அமைப்பதன் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள இளைஞா்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

மேலும், குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் புதிய கல்வியியல் கல்லூரி அமைப்பதற்காக இடம் தோ்வு செய்யப்படுவதற்காக அறிஞா் அண்ணா மேல்நிலைப் பள்ளியையும், அதேபோல குன்னூா் தொகுதியில் புதிய அரசு கலைக் கல்லூரி அமைக்க பந்துமை பகுதியில் இடம் தோ்வு செய்வதற்காகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்சினி, குன்னூா் சாா் ஆட்சியா் தீபனா விஸ்வேஸ்வரி, நில அளவைத் துறை உதவி இயக்குநா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com