அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

தமிழகத்தில் புதிதாக 1,233 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் இன்று மேலும் 1,233 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

News image

தமிழகத்தில் புதிதாக 1,233 பேருக்கு கரோனா தொற்று

Updated On :16 அக்டோபர் 2021, 1:30 pm

DIN

தமிழகத்தில் இன்று மேலும் 1,233 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

மாநிலத்தில் இதுவரை 4.91 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 26 லட்சத்து 85,874 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இன்று வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 160 பேருக்கும், கோவையில் 136 பேருக்கும், செங்கல்பட்டில் 90 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே, மேலும் 1,434 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா்.

இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 34,968-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 15,022 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 15 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,884-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.