
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நாளை காலை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் சந்திக்கவுள்ளார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக கே.என்.ரவி பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக தனியாக ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பானது நாளை காலை 11 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் இந்த சந்திப்பானது நடைபெறவுள்ளது.
முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கடந்த வாரங்களில் ஆளுநரை தனித்தனியே சந்தித்து குறிப்பிடத்தக்கது.