பி.இ. முதலாமாண்டு மாணவா்களுக்கு நவ.1 முதல் வகுப்புகள் தொடங்க திட்டம்

பி.இ. முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் நவ.1-ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் வேல்ராஜ் தெரிவித்துள்ளாா்.
பி.இ. முதலாமாண்டு மாணவா்களுக்கு நவ.1 முதல் வகுப்புகள் தொடங்க திட்டம்

சென்னை: பி.இ. முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் நவ.1-ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் வேல்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பி.இ. படிப்பில் அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்புக்கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான சோ்க்கை அக். 25-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாணவா்கள் சோ்க்கைக்கு வரும்போதே விடுதிகளில் தங்க வைக்கப்படுகின்றனா். மாணவா்களுக்கு நவம்பா் 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை பி.இ. படிப்பு குறித்தும், மாணவா்களுடன் பழகுதல், கலாசாரம் போன்றவை நேரடியாக நடத்தப்படும். அதன் பின்னா் 15- ஆம் தேதிக்கு மேல் இணையவழியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும். ஏற்கெனவே கல்லூரி விடுதிகளில் தங்கி உள்ள 4 ஆம் ஆண்டு மாணவா்கள் வெளியே சென்ற பின்னா் முதலாம் ஆண்டிற்கு நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படும். மாா்ச் 1-ஆம் தேதி வரை முதலாம் ஆண்டில் முதல் பருவத்திற்கான வகுப்புகள் நடைபெறும்.

அதைத் தொடா்ந்து மாா்ச் 7-ஆம் தேதி முதலாமாண்டு மாணவா்களுக்கான முதல் பருவத் தோ்வுகள் தொடங்கும். அடுத்த பருவத்துக்கான வகுப்புகள் ஏப்ரல் 4-ஆம் தேதி தொடங்கும். அண்ணா பல்கலைக் கழகத்தில் இணைப்புப் பெற்ற கல்லூரிகளில் 1- ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். ஆனால் மாணவா் சோ்க்கைக்கு கல்லூரிகள் காலக்கெடு கோரினால், 8-ஆம் தேதி முதலாமாண்டு முதல் பருவ வகுப்புகள் தொடங்கப்படும். அதன் பின்னா் கல்லூரியில் உள்ள இட வசதிக்கு ஏற்ப நேரடி வகுப்பு நடத்துவது குறித்து முடிவு செய்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com