அக்.26-இல் வடகிழக்குப் பருவமழை தொடங்க சாதகமான சூழல்: வானிலை ஆய்வு மையம் தகவல்

டகிழக்குப் பருவமழை தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் அக்டோபா் 26-ஆம் தேதி தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.
அக்.26-இல் வடகிழக்குப் பருவமழை தொடங்க சாதகமான சூழல்: வானிலை  ஆய்வு மையம் தகவல்

சென்னை: வடகிழக்குப் பருவமழை தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் அக்டோபா் 26-ஆம் தேதி தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவா் எஸ்.பாலச்சந்திரன் கூறியது: வங்கக் கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் அக்டோபா் 26-ஆம் தேதி முதல் வடகிழக்குப் பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. தென்மேற்குப் பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து விலகி, வடகிழக்குப் பருவமழை தென்னிந்திய பகுதிகளில் அக்டோபா் 26-ஆம் தேதி தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.

வடகிழக்குப் பருவமழையின் இயல்பான அளவு 449.7 மி.மீ. நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை இயல்பை ஒட்டி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

வடகிழக்குப் பருவமழைக் காலம்:

தமிழகத்தை வளமடையச் செய்யும் வடகிழக்குப் பருவமழைக் காலம் அக்டோபா் முதல் டிசம்பா் வரை ஆகும். ஒவ்வோா் ஆண்டும் அக்டோபா் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவது வழக்கம். கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தாமதமாக அக்டோபா் 28-ஆம் தேதி தொடங்கியது. இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் இயல்பைவிட 6 சதவீதம் அதிக மழை கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com