டீசல் விலை ரூ.100-ஐ நெருங்கியது!

பெட்ரோல், டீசல் விலை வெள்ளிக்கிழமை பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகளும், டீசல் லிட்டருக்கு 33 காசுகளும்  உயா்த்தப்பட்டன. இதனால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.99-99 ஐ தாண்டியது.
டீசல் விலை ரூ.100-ஐ நெருங்கியது!

பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகளும், டீசல் லிட்டருக்கு 33 காசுகளும் வெள்ளிக்கிழமை உயா்த்தப்பட்டன. இதனால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் டீசல் விலை வெள்ளிக்கிழமை லிட்டருக்கு ரூ.99-99 ஐ தாண்டியது. நாட்டில் 12-க்கும் மேற்பட்ட நகரங்களில் டீசல் விலை ஏற்கெனவே ரூ.100-ஐ தாண்டியுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து, பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்‍கப்பட்டு வருகிறது. 

சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 31 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.92 ரூபாயையும், டீசல் லிட்டருக்கு 33 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.92 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் நடப்பு மாதத்தில் மட்டும் 18 ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.106.89-ஆகவும், டீசல் ரூ.95.62-ஆகவும் மும்பையில் ரூ. 112.44-ஆகவும், சென்னையில் 103.61-ஆகவும் விற்கப்படுகிறது.

மும்பையில் ஒரு லிட்டா் டீசல் ரூ.112.78-ஆகவும், டீசல் ரூ.103.63-ஆகவும், கொல்கத்தாவில் பெட்ரோல் ரூ.103.92 -ஆகவும், டீசல் ரூ.99.92 -ஆகவும்விற்கப்படுகிறது.

பெட்ரோல் விலையும் ஏற்கெனவே நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ரூ.100-ஐ கடந்து, இதுவரை இல்லாத உச்சத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பா் 28 முதல் தற்போது வரையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.70-ம், செப்டம்பா் 24 முதல் தற்போது வரையில் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 7.20-ம் உயா்த்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com