தாதா சாகேப் பால்கே விருது பெறுவதில் மகிழ்ச்சி: ரஜினிகாந்த்

மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருது பெறுவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தாதா சாகேப் பால்கே விருது பெறுவதில் மகிழ்ச்சி: ரஜினிகாந்த்

மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருது பெறுவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
2019-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டது. 25-ம் தேதி(நாளை) தில்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்துக்கு இந்த விருது வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிறகு தமிழ் திரைப்படத்துறையில் ரஜினிகாந்த் இந்த விருதை பெறவுள்ளார். 
இந்திய சினிமா வரலாற்றில் மிக உயரிய விருதாக கருதப்படும் ‘தாதா சாகேப் பால்கே’ விருது திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருது பெறுவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தாதா சாகேப் பால்கே விருது கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. விருது பெறுவது மகிழ்ச்சி. நான் விருது பெறும் இந்த தருணத்தில் கே.பாலசந்தர் இல்லையே என்பது வருத்தமாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com