
சென்னை: வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டில் காலியாக இருக்கும் இடங்களை பிறபிரிவு மாணவர் மூலம் நிரப்பலாம் என்று தமிழக உயர்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதாவது, தமிழகத்தில் மாணவர் சேர்க்கையின்போது, வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் காலியிடங்கள் இருப்பின், அதனை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்டு நிரப்பலாம் என்று தமிழக உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒரு பிரிவில் ஏற்படும் காலியிடங்களை, மற்றோர் பிரிவு மாணவர் மூலம் சுழற்சி முறையில் நிரப்ப தமிழக உயர்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், தென் மாவட்டங்களில் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரிவில் காலி இடங்கள் இருப்பின் அதனை வன்னியர்கள் மூலம் நிரப்பலாம் என்றும் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.