சென்னையில் கரோனா நிலவரம் எப்படி இருக்கிறது?

சென்னையில் அக்டோபர் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1,508 ஆக உள்ளது. 
சென்னையில் கரோனா நிலவரம் எப்படி இருக்கிறது?
சென்னையில் கரோனா நிலவரம் எப்படி இருக்கிறது?


சென்னை: சென்னையில் அக்டோபர் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1,508 ஆக உள்ளது.

சென்னையில் கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், 

சென்னையில் இதுவரை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5.54 லட்சமாக உள்ளது. இவர்களில் 5.44 லட்சம் பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துவிட்டனர். 1,508 பேர் சிகிச்சையில் உள்ளனர். 8,541 பேர் மரணமடைந்துவிட்டனர்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக, தேனாம்பேட்டையில் 171 பேரும் கோடம்பாக்கத்தில் 153 பேரும் அண்ணாநகரில் 151 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் நாள்தோறும் கரோனா உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை
28அக்டோபர்: 135
27அக்டோபர்: 139
26அக்டோபர்: 141
25அக்டோபர்: 144
24அக்டோபர்: 146
23அக்டோபர்: 141
22அக்டோபர்: 147
21அக்டோபர்: 152
20அக்டோபர்: 148
19அக்டோபர்: 156
18அக்டோபர்: 150
17அக்டோபர்: 156
16அக்டோபர்: 160
15அக்டோபர்: 167
14அக்டோபர்: 163
13அக்டோபர்: 173
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com