
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணனுக்கு சனிக்கிழமை (அக்.30) பிற்பகல் உடல்நலம் பாதிக்கப்பட்டு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவா் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூச்சுத்திணறல் சரியான நிலையில் ஓய்வு எடுத்து வருகிறார். இன்று அல்லது நாளை அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கே.பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடமும் கேட்டறிந்தார்.