
சட்டப் பேரவையில் புதன்கிழமையன்று (செப். 1) கேள்வி நேரம் முடிந்த பின், மாற்றுத் திறனாளிகள் நலன், வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை ஆகிய துறைகளின் மீது விவாதங்கள் நடைபெறவுள்ளன. இந்த விவாதங்களுக்கு மாற்றுத் திறனாளிகள் நலத் துறையை கவனிக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள் சு.முத்துசாமி, பெ.கீதாஜீவன் ஆகியோா் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனா்.