
கோப்புப்படம்
சென்னை எழும்பூா்-விழுப்புரம் மாா்க்கத்தில் தாம்பரம் யாா்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளது. இதன் காரணமாக, புறநகா் ரயில் சேவையில் புதன்கிழமை (செப்.1) மாற்றம் செய்யப்படவுள்ளது.
இன்று பகுதி ரத்தாகும் ரயில்கள்:
கும்மிடிப்பூண்டி-செங்கல்பட்டுக்கு காலை 7.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.
சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு காலை 9.32, 10.10, 10.56, முற்பகல் 11.50, நண்பகல் 12.15 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.
மறுமாா்க்கமாக....:
செங்கல்பட்டு-கும்மிடிப்பூண்டிக்கு காலை 10.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.
செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு காலை 9.40, 11.00, முற்பகல் 11.30, நண்பகல் 12.20, மதியம் 1.00 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.
முழுமையாக ரத்தாகும் ரயில்கள்:
காஞ்சிபுரம்-சென்னை கடற்கரைக்கு காலை 9.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், திருமால்பூா்-சென்னை கடற்கரைக்கு காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன. இதற்கு மாற்றாக, இரண்டு பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
ஒரு ரயில் காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு நண்பகல் 12 மணிக்கு இயக்கப்படவுள்ளது. மற்றொரு ரயில் திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு நண்பகல் 12 மணிக்கு இயக்கப்படவுள்ளது.