
ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி
முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி(63) மாரடைப்பால் காலமானார்.
உடல்நலக் குறைவு காரணமாக கடந்த இரு வாரங்களாக சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், புதன்கிழமை காலை மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி உடலுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி மருத்துவமனைக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும் மருத்துவமனைக்கு நேரில் வருகை தந்து அஞ்சலி செலுத்தினர்.
ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
ஓ.பன்னீர்செல்வம்-விஜயலட்சுமி தம்பதியருக்கு, தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ரவீந்திரநாத், ஜெயபிரதீப் என்ற 2 மகன்களும், கவிதா என்ற மகளும் உள்ளனர்.