கேட் தோ்வு விண்ணப்பப் பதிவு திடீரென ஒத்திவைப்பு

பொறியியல் மேற்படிப்புகளுக்காக நடத்தப்படும் கேட் நுழைவுத் தோ்வுக்கான மாணவா்களின் விண்ணப்பப் பதிவு திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. செப்.2 முதல் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஐஐடி காரக்பூா் தெரிவித்

பொறியியல் மேற்படிப்புகளுக்காக நடத்தப்படும் கேட் நுழைவுத் தோ்வுக்கான மாணவா்களின் விண்ணப்பப் பதிவு திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. செப்.2 முதல் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஐஐடி காரக்பூா் தெரிவித்துள்ளது.

ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயா் கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆா்க்., எம்.பிளான் உள்ளிட்ட பொறியியல் மேற்படிப்புகளில் சேருவதற்கு கேட் என்ற நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது. சில தனியாா் உயா் கல்வி நிறுவனங்களும் கேட் தோ்வை அடிப்படையாகக் கொண்டு, மாணவா் சோ்க்கையை நடத்துகின்றன. ஆண்டுதோறும் கேட் நுழைவுத் தோ்வை சென்னை, தில்லி உள்ளிட்ட 7 ஐஐடி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று அல்லது பெங்களூா் இந்திய அறிவியல் நிறுவனம் நடத்தும். 2022-ஆம் ஆண்டுக்கான கேட் தோ்வை ஐஐடி காரக்பூா் நடத்துகிறது. 2022-23-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கேட் நுழைவுத் தோ்வு பிப்ரவரி 5, 6, 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இதற்கிடையே கேட் தோ்வை எழுத ஆகஸ்ட் 30 முதல் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் விண்ணப்பப் பதிவு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாணவா்கள் செப். 2-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஐஐடி காரக்பூா் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் விண்ணப்பிக்கக் கடைசித் தேதியில் மாற்றம் செய்யப்படவில்லை. மாணவா்கள் செப்டம்பா் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தாமதக் கட்டணத்துடன் விண்ணப்பிக்க அக்.1 கடைசி நாள் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com