மதுரையில் செப்.11-இல் தினமணி-மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழா

மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டையொட்டி, தினமணி நாளிதழ் வெளிக்கொணரும், "மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு மலர்' வெளியீட்டு விழா
மதுரையில் செப்.11-இல் தினமணி-மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழா

மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டையொட்டி, தினமணி நாளிதழ் வெளிக்கொணரும், "மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு மலர்' வெளியீட்டு விழா மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை (செப்டம்பர் 11) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
 மகாகவி பாரதியார் அமரராகி ஒரு நூற்றாண்டு கடந்துவிட்டது. வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி அவரின் நினைவு நூற்றாண்டு நிறைவடைகிறது.
 மகாகவி பாரதியாரின் 13-ஆவது ஆண்டு நினைவு நாளில், அவரின் கொள்கைகளைப் பரப்பும் நோக்குடன் பிறந்த நாளிதழ் என்பதால், முண்டாசுக் கவிஞனின் நினைவு நூற்றாண்டைச் சிறப்பிக்கும் விதத்தில், சிறப்பு மலரை தினமணி நாளிதழ் வெளிக் கொணர்கிறது.
 பாரதியார் பணியாற்றிய பெருமைக்குரிய மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில், "மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு மலர்' வெளியீட்டு விழா சனிக்கிழமை (செப்டம்பர் 11) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
 இவ்விழாவில், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் வரவேற்புரையாற்றுகிறார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் மலரை வெளியிட, உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார். மதுரை கம்பன் கழகத் தலைவர் சங்கர சீதாராமன் தலைமை வகிக்கிறார். தமிழறிஞர் சாலமன் பாப்பையா முன்னிலை வகிக்கிறார். சேதுபதி மேல்நிலைப் பள்ளிச் செயலர் எஸ். பார்த்தசாரதி நன்றியுரையாற்றுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com