100% கரோனா தடுப்பூசி போட்ட பல்லவாடா ஊராட்சிக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

பல்லவாடா ஊராட்சியில் 18 வயதிற்கு மேற்பட்ட 100 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதை பாராட்டி மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கினார். 
100% கரோனா தடுப்பூசி போட்ட பல்லவாடா ஊராட்சிக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா ஊராட்சியில் 18 வயதிற்கு மேற்பட்ட 100 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதைப் பாராட்டி ஊராட்சித் தலைவர் பி.லட்சுமி பன்னீர்செல்வத்திடம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டு சான்றிதழ், நினைவுப் பரிசளித்தார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா ஊராட்சியில் கரோனா தடுப்பூசி போடும் பணியை ஊராட்சித் தலைவர் பி.லட்சுமி பன்னீர்செல்வம் ஊக்குவித்து, பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்.

இதனைத் தொடர்ந்து பல்லவாடா ஊராட்சியில் தொடர்ந்து தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், ஊராட்சியைச் சேர்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட மக்கள் அதிக அளவு தடுப்பூசி போடத் துவங்கினர்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 100 சதவீதம் தடுப்பூசி போட்ட பல்லவாடா ஊராட்சியில் உள்ள 37 ஊராட்சி தலைவர்களுக்கு பாராட்டி நற்சான்றிதழ், நினைவு பரிசு வழங்கும் நிகழ்வு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையிலும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பல்லவாடா ஊராட்சியில் 18 வயதிற்கு மேற்பட்ட 100 சதவிதத்தினர் கரோனா தடுப்பூசி போட்டதற்காக ஊராட்சி மன்றத் தலைவர் பி.லட்சுமி பன்னீர்செல்வத்தை பாராட்டி பரிசளித்தார். இந்த நிகழ்வில் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன், நடராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 61 ஊராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசி போட்ட முதல் ஊராட்சியாக பல்லவாடா ஊராட்சி என்ற நற்பெயரை பெற்றிருப்பதால் பல்லவாடா ஊராட்சித் தலைவர் பி.லட்சுமி பன்னீர் செல்வத்தை கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழுத் தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், ஒன்றிய பொறியாளர் நரசிம்மன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com