தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். 
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். 

தமிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநிலத்தின் முழுநேர ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதை அடுத்து, நாகாலாந்து ஆளுநராகப் பொறுப்பு வகித்து வரும் ஆர்.என்.ரவி, தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உத்தரகண்ட் ஆளுநராக இருந்த பேபி ராணி மயூராவின் ராஜிநாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.

’இதனையடுத்து உத்தரகண்ட் ஆளுநராக லெப்டினெண்ட் ஜெனரல் குர்மித் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஆர்.என்.ரவி. வகித்து வந்த நாகாலாந்து ஆளுநர் பொறுப்பினை அஸ்ஸாம் மாநில ஆளுநர் ஜெக்தீஷ் முகி கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com