ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

Published On :28 ஜனவரி 2024, 9:38 am IST

சென்னை: தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சன்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், இன்று காலை tneaonline.org என்ற இணையதளத்தில் பொறியியல் தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் 440 கல்லூரிகளில் உள்ள 1,51,870 சேர்க்கை இடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.

தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், தொழிற்கல்வி படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை அடிப்படையிலான கலந்தாய்வு செப்டம்பா் 17-ஆம் தேதி முதல் 24- ஆம் தேதி வரை இணைய வழியில் நடைபெறும். 

அதேபோன்று விளையாட்டு வீரா்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு செப்டம்பா் 17ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெறும். 

பொதுக் கலந்தாய்வு செப். 27 முதல் அக்டோபா் 17 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பித்த 22,671 அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ப, 1,74,930 பேருக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பொறியியல் கலந்தாயவில் 461 கல்லூரிகள் பங்கேற்ற நிலையில், கட்டமைப்பு, போதிய ஆசிரியர்கள் இன்மை போன்றவற்றால், சில கல்லூரிகளின் உரிமத்தை நீட்டிக்க தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மறுத்துவிட்டது. இதனால், கடந்த ஆண்டை விட, 11,284 மாணவர் சேர்க்கை இடங்கள் குறைந்துள்ளது. 

இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களை விட குறைவான சேர்க்கை இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.