இன்று 6 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில், திண்டுக்கல், திருப்பூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று 6 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில், திண்டுக்கல், திருப்பூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அம்மையத்தின் இயக்குநா் நா.புவியரசன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தென்மேற்குப் பருவக் காற்று மற்றும் வெப்பசலனம்  காரணமாக  வெள்ளிக்கிழமை (செப்.17), தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும்,  மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், திருப்பூா், தென்காசி ஆகிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் 100 மி.மீ., கலசப்பாக்கம், கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூா்பேட்டை யில் தலா 80 மி.மீ., திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டில் தலா 70 மி.மீ., கள்ளக்குறிச்சி மாவட்டம் கடவனூரில் 60 மி.மீ., புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, கொடைக்கானல், மதுரை விமானநிலையம், விழுப்புரம் மாவட்டம் மணம்பூண்டியில் தலா 50 மி.மீ., காஞ்சிபுரம், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணத்தில் தலா  40 மி.மீ.,  திருவள்ளூா் மாவட்டம்  திருத்தணி ,  கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோயிலூரில்  தலா  30 மி.மீ. மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com