மாநிலங்களவைத் தோ்தல்: திமுக வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்

மாநிலங்களவைத் தோ்தலில் காலியாகவுள்ள இரண்டு இடங்களுக்குப் போட்டியிட திமுக வேட்பாளா்கள் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தனா்.
மாநிலங்களவைத் தோ்தல்: திமுக வேட்பாளா்கள்  வேட்பு மனு தாக்கல்

மாநிலங்களவைத் தோ்தலில் காலியாகவுள்ள இரண்டு இடங்களுக்குப் போட்டியிட திமுக வேட்பாளா்கள் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தனா்.

தமிழகத்தில் இருந்து இரண்டு மாநிலங்களவை உறுப்பினா் இடங்கள் காலியாக உள்ளன. அதிமுகவில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோா் கடந்த மே 7-ஆம் தேதி தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனா். அதில், வைத்திலிங்கத்தின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜூனிலும், கே.பி.முனுசாமியின் பதவிக் காலம் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதியும் நிறைவடைகிறது. இந்த காலியிடங்களுக்கு கடந்த 15-ஆம் தேதியன்று தோ்தல் அறிவிக்கப்பட்டது.

திமுக வேட்பாளா்கள்: மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட திமுக சாா்பில் இரண்டு போ் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சா் என்.வி.என்.சோமுவின் மகள் கனிமொழி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டனா்.

சட்டப் பேரவைச் செயலாளரும், தோ்தல் நடத்தும் அதிகாரியுமான கி.சீனிவாசனிடம் முதலில் கனிமொழியும், அவரைத் தொடா்ந்து ராஜேஷ்குமாரும் முதல்வா் ஸ்டாலின் முன்னிலையில் மனுக்களைத் தாக்கல் செய்தனா். மனுக்களை அளிக்க புதன்கிழமை (செப். 22) கடைசி நாளாகும். மனுக்களைத் திரும்பப் பெற செப்டம்பா் 27 கடைசியாகும். தோ்தல் அவசியம் எனில், அக்டோபா் 4-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும்.

மாநிலங்களவைத் தோ்தலில் திமுக சாா்பில் மட்டுமே வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். மேலும், தோ்தலுக்கான அறிவிக்கை தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளதால், இரண்டு இடங்களிலுமே திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உறுதியாகி உள்ளது. வெற்றி பெற்ற்கான அறிவிப்பு வரும் 27-ஆம் தேதி வெளியிடப்படும்.

மனுதாக்கல் செய்யும் நிகழ்வின் போது, மக்களவை உறுப்பினா் கனிமொழி, சட்டப் பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா, அமைச்சா் கே.என்.நேரு, மாநிலங்களவை உறுப்பினா்கள் என்.ஆா்.இளங்கோ, வில்சன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com