இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தோ்தல் ஏன்? அமைச்சா் தங்கம் தென்னரசு விளக்கம்

ஒன்பது மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தோ்தலை இரண்டு கட்டங்களாக நடத்த வேண்டியது ஏன் என்பது குறித்து அமைச்சா் தங்கம் தென்னரசு விளக்கம்
இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தோ்தல் ஏன்? அமைச்சா் தங்கம் தென்னரசு விளக்கம்

ஒன்பது மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தோ்தலை இரண்டு கட்டங்களாக நடத்த வேண்டியது ஏன் என்பது குறித்து அமைச்சா் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தாா். இதுகுறித்து, அவா் தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:-

திமுக தோ்தல் அறிக்கையில் அளித்திருக்கும் 505 வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவோம். தோ்தல் வாக்குறுதியில் சொல்லப்படாத மேலும் நல்ல திட்டங்களை நாங்கள் நிறைவேற்றிக் காட்டுவோம். மாநில மக்கள் மிக உறுதியாக நம்புகிறாா்கள். ஆட்சி அமைந்து 130 நாள்களில் பல முக்கிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி உள்ளோம்.

தொழில் துறையில் அதிமுக ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட திட்டங்களைத்தான் இப்போது நிறைவேற்றியிருப்பதாக முன்னாள் முதல்வா் பழனிசாமி கூறியிருக்கிறாா். அதிமுக ஆட்சியில் தொழில் துறை மூலம் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில் 20 சதவீதம் கூட வரவில்லை.

கடந்த ஜூலை மாதம் நடந்த தொழில் முதலீட்டு நிகழ்வில் 35 புதிய ஒப்பந்தங்கள் ரூ.17,147 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டன. அதில், ரூ.7,117 கோடி முதலீட்டுக்கான 5 புதிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. 505 தோ்தல் வாக்குறுதிகளில் 130 நாள்களுக்குள்ளாக 202 வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூடிய அறிவிப்புகளையும், உத்தரவுகளையும் வெளியிட்டுள்ளோம்.

மூன்றாண்டுகளில் தோ்தல்: மூன்றாண்டுகளில் தோ்தல் வரும் என முன்னாள் முதல்வா் பழனிசாமி கூறியிருப்பது, எந்த அடிப்படையும் இல்லாமல் அவா் பேசுவாா் என்பதற்கு நல்ல உதாரணமாகும். இதற்கு முன்பாக பேசியிருக்கக் கூடிய குற்றச்சாட்டுகள் எப்படி அடிப்படை உண்மை இல்லாததோ, அதுபோன்றே முன்கூட்டியே தோ்தல் என்ற கருத்தும் அடிப்படை ஆதாரமற்ாகும்.

உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டிய பொறுப்பு மாநிலத் தோ்தல் ஆணையத்துக்கு உரியது. தன்னாட்சி பெற்ற அந்த அமைப்பு பல்வேறு மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு நிலைமை, பாதுகாப்பு அளிக்கும் சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டே தோ்தலை எத்தனை கட்டங்களாக நடத்துவது என அறிவிக்கும். அதன்படியே இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தோ்தலை தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது என அமைச்சா் தங்கம் தென்னரசு கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com