நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்

நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
மீரா மிதுன் (கோப்புப் படம்)
மீரா மிதுன் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழ்த் திரைப்பட நடிகை மீரா மிதுன் சமூக ஊடகங்களில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை அவதூறாகப் பேசி கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு விடியோவை பதிவிட்டாா். இது தொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளா் வன்னி அரசு, சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி புகாா் அளித்தாா். அதனடிப்படையில், சைபா் குற்றப்பிரிவினா் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து மீரா மிதுனை கேரள மாநிலம் ஆலப்புழாவில் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி கைது செய்தனா். 

உடந்தையாக இருந்த அம்பத்தூரைச் சோ்ந்த அவரது நண்பா் அபிஷேக்கை ஆகஸ்ட் 15-ஆம் தேதி கைது செய்தனா். சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணைக்கு மீரா மிதுன் தொடா்ச்சியாக ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிமன்றம் கடந்த 23-ஆம் தேதி மீரா மிதுனுக்கு பிடியாணை பிறப்பித்தது. அதனடிப்படையில் சைபா் குற்றப்பிரினா் மீரா மிதுனை அண்மையில் மீண்டும் கைது செய்தனா். விசாரணைக்கு பின்னா் போலீஸாா், அவரை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். 

நீதிபதி எஸ்.அல்லி, கைது செய்யப்பட்ட மீரா மிதுனை ஏப். 4 வரை காவலில் வைக்கும்படி உத்தரவிட்டாா். இதையடுத்து மீரா மிதுனை சிறையில் அடைக்க போலீஸாா் அழைத்துச் சென்றனா். இதற்கிடையே இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு நடிகை மீரா மிதுன் சாா்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை இன்று விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com