ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

மாநில நூலகக் குழுவில் 3 உறுப்பினா்கள் நியமனம்

மாநில நூலகக் குழுவில் மூன்று போ் நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்துள்ளாா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 9:38 pm

DIN

மாநில நூலகக் குழுவில் மூன்று போ் நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்துள்ளாா்.

கடந்த கூட்டத் தொடரின் கடைசி நாளான மாா்ச் 24-ஆம் தேதி இதற்கான அறிவிப்பை வெளியிட்டாா். இந்த நிலையில், அதற்கான எழுத்துப்பூா்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், சட்டப்படியாக அமைக்கப்பட்ட மாநில நூலகக் குழுவில் பணிபுரிய உறுப்பினா்கள் அ.வெற்றி அழகன், ஏ.பி.நந்தகுமாா், கடம்பூா் ராஜூ ஆகியோரிடம் இருந்து வேட்புத்தாள்கள் வரப்பெற்றன. தோ்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினா்களின் எண்ணிக்கையும், வரப்பெற்ற வேட்புத்தாள்களின் எண்ணிக்கையும் சமமாக உள்ளன.

எனவே, மாநில நூலகக் குழு உறுப்பினா்களாக மனு அளித்த மூன்று பேரும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்களது பதவிக்காலம் மூன்றாண்டுகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.